உனது நான்பற்றி ? என்ற கேள்விக்கு ஆன்மிகம், பட்டறிவு, படிப்பறிவு, உள்ளொளி, சமூக அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிக்கிறது இந்நூல்.
சமூகச் செயல்பாட்டுப் பணி, சட்டப்பணி, அரசியல் பணி, எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, சமயப்பணி என்று பன்முகத்திறனோடு தன் வாழ்நாளை இந்தியச் சமூகத்திற்கும் அடித்தட்டு மக்களுக்கும் செலவிட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்நூலில் நுட்பமாகப் படம்பிடித்துள்ளார் நூலாசிரியர்.
இறைவேண்டலாக, சமுதாயம் நலம்பெற, திருவிவிலிய வழியில், மன்னிப்புப் பெற, இளையோருக்காக, உறவுகள் பலப்பட, இறையாட்சி என்று ஆறு சிலுவைப் பாதைகள் அமைந்துள்ளன.
சமூக அக்கறையுடன் கூடிய பதினேழு கட்டுரைகளின் தொகுப்பு இது.
புனிதர்களான அல்போன்சா. அருளானந்தர். பிரான்சிஸ் அசிசியார், அந்தோனியார், அன்னை தெரேசா, தேவசகாயம்பிள்ளை ஆகியோரின் வரலாறு.
வளர்ச்சிக்கான வாழ்வியல் நெறிகளை 35 தலைப்புகளில் விறுவிறுப்பான நடையில் தருகிறது இந்நூல்.
1578ஆம் ஆண்டு தமிழ் எழுத்துகளை நவீன அச்சு எந்திரங்களில் பதிப்பித்து முதன்முதலாக நூலாக வெளியிட்டவர் அண்ட்ரிக் அடிகளார்! பன்முகத்தன்மை கொண்ட இவரது ஆளுமையை விவரிக்கிறது இந்நூல்.
பல்வேறு சவால்களுக்கிடையே வாழ்ந்து காட்டுவதற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் விதைக்கிறது இந்நூல்.
மெசியாவின் வருகை குறித்த முன்னுரைப்புகள், இயேசு பிறந்து போது நிலவிய இஸ்ரயேல் சமூகச்சூழல், இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு தொடர்பான நிகழ்வுகள் ஆகியவற்றின் தொகுப்பு இது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களைச் சுற்றுச்சூழல் பண்பாட்டில் வளர்த்தெடுக்க இக்கையேடு நிச்சயம் உதவும்.
நாம் அதிகம் அறிந்திராத, சமூக அக்கறையுடன் வாழ்ந்து முன்மாதிரியாகத் திகழும் 100 மனிதர்களின் வாழ்வைப் பதிவு செய்கிறது இந்நூல்.
எல்சால்வதோர் நாட்டின் அடையாளங்களில ஒன்றாகிப்போன புனித ஆஸ்கர் ரொமேரோவின் வாழ்க்கை வரலாறு.
இயேசு சபையின் பாதுகாவலியாம் வழித்துணை மாதா பற்றிய பல்வேறு பரிமாணங்களை தொகுத்திருக்கிறது இந்நூல்.
மாணவர்களுக்கான 17 பொது அறிவு சிறுகதைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன .
வாழ்வுக்கு வழிகாட்டும் 29 ஆளுமைகளின் இரத்தின சுருக்கமான வரலாறு
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium