புனித இஞ்ஞாசியாரைப் பற்றிய தன்வரலாற்று நூல்
புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தந்து அந்த வரலாற்றில் இழையோடும் மரியன்னையின் உறவை உய்த்துணர்ந்து ஏற்கனவே நாம் அறிந்த புனிதர்களை புதியதொரு கோணத்தில் சுவைபட தருவதே மரியன்னை புனிதர்கள் .
புனித யோசேப்பின் ஆண்டு என்ற திருஅவையின் அறிவிப்பால் அவரைப் பற்றி வாசிக்க, சிந்திக்க, அவர் வழியில் இறைவேண்டல் செய்ய, செயல்பட ஒரு தூண்டுதலை ஏற்படுத்தவே இச்சிற்றேட்டைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்
திருவிவிலியம் பதிவு செய்துள்ள இயேசுவின் பார்வைகளை பின்னணியாககொண்டு நாம் தியானமும் இறைவேண்டலும் செய்ய பயனுள்ளதாக அமைகிறது இந்நூல்.
தலைமைத்துவத்தை புரிந்துகொள்ள தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள எத்தனை கருத்தரங்குகள், எத்தனை பயிற்சிகள், எத்தனை உரைவீச்சுகள், எத்தனை பகிர்வுகள், எத்தனை முயற்சிகள், எத்தனை எடுத்துக்காட்டுகள். ஆனாலும் அதில் இன்னும் பல புதிர்கள் அடங்கியே இருக்கின்றன. அந்தப் புதிர்களை விடுவிப்பதற்கான தேடல்தான் தலைமைத்துவம் தழைத்திட ...
பல்வேறு காலகட்டங்களில் சூழல்களில் எழுதப்பட்ட சமூக மாற்று சிந்தனை கட்டுரைகள்
படிப்பை ஒரு சுமையாக கருதும் போக்கு பலருக்கு உண்டு. அந்தக் கலைக்கும் பயிற்சிகள் உண்டு. அனுபவித்து மகிழ்ச்சியாக அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் நமது படிப்பும் ஒரு பேராற்றலாக மாறும்.இந்தக் கலைக்கான சூத்திரத்தை சுருக்கமாக இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.
பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க இளமை பருவத்திலேயே அகத்தேடலுக்கான பயிற்சிகளை தந்துவிட்டால் இளையோரின் வாழ்வு தன்னம்பிக்கை நிறைந்ததாக இலக்கு நோக்கி பயணிக்கும். அதற்கான பயிற்சிகளை தருகிறது இந்நூல் .
மத்திய கிழக்கு இந்தியாவில் மண்ணோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து அடக்குமுறைச் சட்டங்களால் சாம்பல் பறவையாகிப்போன ஸ்டான் ஸ்வாமி அவர்களின் தன்வரலாறு இந்நூலில் பழங்குடி மக்களின் வரலாறாகவே காட்சியளிக்கிறது .
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium