மாறுபடும் சுற்றுச் சூழல், அரசியல் சூழல், சமூகச் சூழல் இவற்றுக்கிடையே தனிநபர்கள் தம் உடல் நலத்தோடு மன நலத்தைப் பேணவேண்டிய தேவையை இன்றைய மக்கள் சமூகம் உணர்ந்திருக்கிறது. இதற்காக எளிமையாகவும் நுட்பமாகவும் வழிகாட்டுகிறது இந்நூல்.
இயேசுவின் காலம் தொடங்கி, இன்றைய மேடைப் பேச்சாளர்களின் காலம் வரை கதைகள் தனி இடத்தை பெற்றுருக்கின்றன. இந்நூலில் உள்ள நூறு கதைகளும் அவற்றின் இறுதியில் சொல்லப்படும் நீதியும் நினைத்து நினைத்து அசை போடத்தக்கது.
இயேசு சபையின் ஓர் அருள்பணியாளராக, இறையியல் பேராசிரியராக, அருளாளராகப் பரிணமித்தவர்தான் ரூட்டிலியோ கிராந்ததே! அவரின் வரலாற்றை ஒரு குறுங்கதையாகவும் ஒரு நாடகமாகவும் இந்நூலில் தந்திருப்பது இந்நூலின் சிறப்பு
விவிலியம் குறித்த பல்வேறு சிந்தனைகளைத் தாங்கி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன.எண்ணற்ற குட்டிக் கதைகளை சுமந்து எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இவை இரண்டையும் இணைத்து ஒவ்வொரு கதைக்கும் ஏற்ற விவிலிய மேற்கோள்களுடன் சுருக்கமான விளக்கம் தந்து அமையப்பெற்றது இந்நூல்.
இயேசுவும் பவுலும் வாழ்ந்து எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஏழைகளின் கதறல், வறியவரின் கண்ணீர், பாலின ஒடுக்குமுறை, சாதிய வர்க்க ஆதிக்கம், அதிகாரப்போட்டி, இயற்கை சுரண்டல் ஆகியவை எழுப்பும் கேள்விக்கு பதில் ஒன்றுதானே! அந்த பதில் எந்த இதயத்திலிருந்து வரவேண்டும் என்பதையும் எத்தகைய பணிவாய் அமைய வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது இந்நூல்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக பிரான்சு நாட்டிலிருந்து வந்து மறைப்பணியாளராகத் தமிழ்நாட்டில் பணியாற்றியபோது அதுவும் அருள்பணியாளராவதற்கான பயிற்சி நிலையில் பாளையங்கோட்டை புனித சவேரியார் கலைமனையில் மாணவர் இல்லத் துணைக்கண்காணிப்பாளராக ஓராண்டு பணி செய்தபோது தம் குடும்பத்தினருக்கு, உறவினருக்கு லெவே அடிகளார் தம் கைப்பட எழுதிய 17 மாடல்களின் தமிழாக்கமே இந்நூல்.
யோவான் நற்செய்தியில் முன்னிறுத்தப்படும் இயேசுவின் பல்வேறு பரிணாமங்களை மிகச் சிறப்பாக அலசி ஆராய்ந்து நூலாக படைத்துள்ளனர் அருள்கடலார் அருள்பணியாளர்கள்
பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மானம், திராவிடம், பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, வர்ணாசிரம சனாதன எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, போன்ற சிந்தனைகள் பேசப்படும்போதும் , செயல்வடிவம் பெறும்போதும், நினைவுகூரப்படும் ஓர் ஆளுமை பெரியார். அவரின் வாழ்வை எளிமையாக எடுத்துக்கூறுகிறது இந்நூல்.
கணவன் - மனைவி உறவு , பெற்றோர் - பிள்ளைகள் உறவு, மாமனார்- மாமியார் உறவு, மாமனார்- மாமியார் மருமக்கள் உறவு ஆகியவற்றின் பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். மேலும் முதல் ஏற்பாட்டு நூல்களை மீண்டும் ஒருமுறை குடும்பங்கள் என்ற பார்வையில் வாசித்து தியானிக்க ஊக்கமூட்டுகிறது .
அர்ப்பணத்தில் மலரும் அதிசய உறவுகள் என்ற இந்நூல் துறவியரின் குழும வாழ்வின் எதார்த்தங்களை நடைமுறை உதாரணங்களுடன் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
மூளை, மனம், உடல் என்று இயற்கையாக நம்முள் அமைந்துள்ள முப்பெரும் ஆற்றலின் ஊற்றினை உய்த்துணர்ந்து ஆற்றொழுக்காக அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறி செல்லும் உத்தியை சுவைபட சொல்வதே இந்நூல்.
சிறார்களுக்கே உரித்தான தேடல், நடைமுறை அனுபவம் பெறுதல், ஆய்வு செய்தல், கேள்வி கேட்டல் ஆகிய பண்புகளோடு வாழ்க்கை நன்னெறிகளையும் குழைத்து இயற்கை வாழியவே என்று முழங்கிருயிக்கிறார் இந்நூலாசிரியர்.
வாரநாட்கள் திருப்பலியில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் அன்றைய நாளுக்குரிய இறைவார்த்தையை தியானிப்பது ஓர் ஆழ்ந்த இறையனுபவம். அந்த அனுபவத்திற்கான ஒரு தூண்டுகோலாக அமைகிறது இந்நூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium