சமூகம் மற்றும் தனிமனித வாழ்வியல் எதார்த்தங்களை பகுப்பாய்வு செய்து மாற்று பாதையை சுட்டிக்காட்டி நெறியாக்கம் செய்கிறது முற்போக்கு பிற்போக்கு என்னும் இந்நூல்.
ஒருவரின் செயல்களே அவரின் சொற்களின் நம்பகத்தன்மைக்கு சான்றளிக்கும். தம் செயல்களின் வாயிலாக வாக்கையும் வாழ்வையும் இணைத்துப் பயணிக்கும் மனிதர்கள் மாமனிதர்களாகிறார்கள். இத்தகைய வல்ல செயலில்தான் இயேசு முத்திரை பதிக்கிறார்.
நாள்களும் நிகழ்வுகளும் என்ற இந்நூல் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளின் சிறப்பை எடுத்துரைக்கும் ஒரு களஞ்சியமாக திகழ்வதுடன் ஒரு பொதுஅறிவு பெட்டகமாகவும் திகழ்கிறது.
பல்வேறு துறைகளில் சாதித்த மனிதர்கள் கடின உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் பின்னால் ஒரு புள்ளியில் அல்லது தருணத்தில் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கு விழிப்பூட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சாதாரண சந்திப்புகளில் மறக்கடிக்கப்படும் மனிதநேய மதிப்பீடுகளை இருபது தலைப்புகளில் அழகாக விளக்குகிறது இந்நூல்.
தன்னையறிந்து தன் திறமைகளை கண்டுணர்ந்து தன்னம்பிக்கையும் சூழ்நிலைகளை தமதாக்கிக்கொள்ளும் விவேகமும் உடையவர்களாக செய்யப்படுவது சாதனையாளர்களின் அடிப்படை பண்பு. எல்லோரும் சாதிக்கலாம் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது.
நமக்குள் மறைந்திருக்கும் தீதும் நன்றும் பகுப்பாய்வு செய்யப்படாமல் இருப்பதால் சமூகத்தையும் அவை புரையோடச் செய்கின்றன. எனேவேதான் இந்தப் பிரச்சனைகள் பலவற்றிலும் மெய்ப்பொருள் வெளிப்படாமல் மறைந்தே நிற்கிறது. இதை வெளிக்கொணரும் சிறு முயற்சியாக தன் சமூக அக்கரைச் சிந்தனைகளை தொகுத்து கூறியுள்ளார் இந்நூலாசிரியர்.
இறைநம்பிக்கையில் வளரும் சிறார்கள் ஞானத்திலும் ஆன்மீகத்திலும் வளர வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு முதல் கட்டமாக திருவிவிலியத்தை வாசிக்க தூண்டும் வகையில் திருவிவிலியத்தின் முதன்மையான சில கருத்துகளையும் நிகழ்வுகளையும் தேர்ந்தெடுத்து எளிமையாக இந்நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர்.
மனம், உடல், சிந்தனை, உணர்வு, உறவு, அறம், நீதி, கடமை, சமூகம், நாடு, அரசியல், பூமி,மனிதம், இறைமை, ஆன்மீகம், சுற்றுசூழல், அறிவியல், பொருளியல் என்று பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கிய சிந்தனைகளை கொண்டு செயற்கரியது எதுவுமில்லை என்கிறது இந்நூல்.
All these prayers with a difference in this book authored by Fr. Jerry has an undercurrent of this triangle bond and remind us the popular Serenity Prayer.
பொதுவுடைமை நூல்
ஊடகம் இல்லாமல் உலகம் இல்லை. ஊடகம் இல்லாமல் உறவுகள் இல்லை. ஊடகம், தனிநபர், சமூகம், உறவு, அறநெறி என்று ஊடகம் தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் அலசி சிறப்பான ஆறு தலைப்புகளில் தொகுத்து கூறியுள்ளார் இந்நூல் ஆசிரியர்.
அன்னை மரியாவை மனதில் கொண்டு புனிதர்களை தேடி தேடி வாசித்து தகவல்களையும் கருத்துகளையும் ஒருசேரத் திரட்டி ஒரு விலைமதிப்பற்ற கதம்பமாக இந்நூலை தந்திருக்கிறார் நூலாசிரியர்.
இயேசு சபையின் அருள்கடலார் சமூக போதனை, பவுலடியாரின் பார்வை, தலித் மக்கள், பெண்கள், இளையோர், குழந்தைகள், சமய நல்லிணக்கம், இயற்கை என்ற பல்வேறு கோணங்களில் கூட்டியக்க திருஅவையை அணுகியதன் விளைவே இறையாட்சிப் பயணிகளாக என்னும் இந்நூல்.
சிறியோரும் பெரியோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையான கதைகளில் திருக்குறலின் உள்ளடக்கத்தை தந்திருப்பது இந்நூலின் சிறப்பு.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium