எல் சால்வதோர் மண்ணில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு, இரத்தமும் சதையுமாய் கிழிந்துதொங்குவதை சொற்களால் படம்பிடிக்கிறது..... ஜான் சொப்ரினோவின் உணர்வுப்பூர்வமான, இறையியல்பூர்வமான, அறிவியல்பூர்வமான இப்படைப்பு உயிர்ப்பின் திசையை நமக்குக் காட்டுகிறது... மக்கள் பிரச்சனைகளோடு பின்னிப்பிணைந்த, சமூக-பொருளாதார-பண்பாட்டு-அரசியலை அறிவுப்பூர்மாகவும் இதயப்பூர்வமாகவும் உரசுகின்ற உயர்கல்வியையும் பல்கலைக்கழகத்தையும் கண்முன் நிறுத்துகிறது.... குருத்துவ வகுப்பறைகளில் உச்சரிக்கப்படும் இறையியல் மண்ணின் மணத்தோடும் புழுதியின் புதல்வர்களோடும் விடுதலை இறையியலாய் புரண்டுகிடப்பதை தமிழில் பதிவுசெய்கிறது.
நிகழ்வுகள் கற்பனைகள் அல்ல. மாறாக, உண்மைச் சம்பவங்கள். நிகழ்வுகளுக்கே உரித்தான வீச்சும் வேகமும் இவற்றில் உண்டு என்பதை நூலை வாசிக்கும்போதே உணரலாம். வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு மீண்டும் உயிரோட்டம் கொடுத்து, அவை தரும் பாடங்களை வாசகர்களுக்கு இந்நூலின் வழியாகக் கற்பிக்கிறார் ஆசிரியர்.
அன்பே சமய வாழ்வின் பாதையென்று, நல்லதொரு வழிகாட்டி அமைந்துவிட்டால் எத்தகு பாதையையும் எளிதில் கடந்திடலாம். அத்தகு வகையில் நம் கையைத் தேடிவந்த நம்பிக்கைப் பயணத்தின் நல்லதோர் வழிகாட்டி இந்நூல்.
It is a Green retreat manual with a focus on practical questions and guidelines to make a Covenant with Creation. This third edition has meaningfully incorporated the key points and highlights of the Encyclical, Laudato Si by Pope Francis.
This book guides students to choose the right path. It will empower students to put first things by choosing high principles and values. To shape and sharpen our behaviour, character, values, vision, skills etc., what we need primarily is self-discipline. Those who followed the principle of life, they have succeeded and achieved in their life. This booklet is a source of motivation to develop self-discipline and to achieve our goal.
In this book the author spoke of the various dimensions of prayer in a simple, heart warming way, reinforcing his views with psychological insights and apt illustrations and quotations and concluded what he had to say with an appropriate prayer.
நம்முடைய எண்ணங்கள் நம்பிக்கை நிறைந்த உயர்ந்த எண்ணங்களாக இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்; ஒரு புதிய வரலாற்றையே படைக்க முடியும் என்பதை இந்நூலின் கருத்துகள் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றன. வெற்றிச் சிந்தனை இருந்தால்தான் வெற்றி என்பதே சாத்தியமாகும். இந்நூல் வெற்றி மனோபாவத்தைக் கொடுக்கும் வல்லமை படைத்தது.
`ஏன்’ என்ற கேள்விதான் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. இப்படித் தேடியவர்கள்தான் அறிவியல் அறிஞர்கள். அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்கள். அறிவியல் உலகின் அற்புத மனிதர்கள். இவர்களைப் போல மாற அழைக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
உலகில் காணப்படும் கல்லாமை, இல்லாமை, இயலாமை, அறியாமை அனைத்தும் ஒழிய நல்லுணர்வுப் பார்வை அவசியம். இப்பார்வை இப்பூவுலகு முழுவதும் பரவ வேண்டும். இத்தகைய நல்லுணர்வைத் தருவதுதான் இந்நூல். மனித உணர்வுகளையும் மனித மனங்களையும் ஆழமாகத் தொடுகின்ற சிந்தனைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
ஆன்மிக வாழ்வின் வளர்ச்சிக்காக நாம் மேற்கொள்ளும் திருவருட்சாதனங்கள், சேவை, தியானம் போன்ற ஆன்மப் பயிற்சிகளுடன் இயேசுவின் பெயரை மந்திரமாகச் சொல்லும் பழக்கத்தை இந்தியக் கிறிஸ்தவர்கள் ஏற்படுத்திக் கொண்டால் இந்தியத் திருச்சபையின் ஆன்மிகம் மறுமலர்ச்சி அடையும். இத்தகைய மறுமலர்ச்சிக்கு உதவியாகத்தான் இச்சிறுநூல் வெளியாகிறது.
அமைதி வேண்டும் என்றால், அதற்கான பக்குவம் நம் ஒவ்வொருவரிலும் வேண்டும், பண்பாடு வேண்டும், அதன்படி மட்டுமே வாழ்வோம் என்ற பிடிப்பு வேண்டும். இந்நூல் சிற்றேடாக இருந்தாலும், சிறந்த செபங்கள் பல்வேறு பின்னணிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, பாங்குறத் தொகுக்கப்பட்டுள்ளன.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium