அதிகம் அறிந்திராத சில பூச்சிகள், புழுக்கள், சிற்றுயிர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக சிறு சிறு கதைகளை உள்ளடக்கிய அறிவியல் நூல் இது.
திருவிவிலியத்தின் அரச மாண்புத் திருப்பாக்கள் மற்றும் சீயோனைப் போற்றும் புகழ்ப் பாக்கள் பாடப்பட்ட காலகட்டம், வரலாற்றுப் பின்புலம், அவற்றில் பொதிந்துள்ள கருத்துகள், உணர்வுகள், இலக்கிய நயம் ஆகியவற்றை இந்த இரண்டாம் பாகம் சுவையாகத் தருகிறது.
திருவிவிலிய புதிய மொழிபெயர்ப்பின் வழி இறைவேண்டல்கள் உட்பட திருப்பலியின் அடக்க சடங்குகளின் தொகுப்பு இச்சிறுநூல்.
பல்வேறு சிந்தனைகளைத் திருவிவிலிய விளக்கமாகவும், இறைவேண்டலாகவும் விடுதலை இறையியலின் சாரத்தோடு, இளமைத் துடிப்போடு தருகிறது இந்நூல் !பல்வேறு சிந்தனைகளைத் திருவிவிலிய விளக்கமாகவும், இறைவேண்டலாகவும் விடுதலை இறையியலின் சாரத்தோடு, இளமைத் துடிப்போடு தருகிறது இந்நூல் !
தனி மனிதரை மட்டுமின்றி மானுட சமூகத்தையும் நலமாக்கிச் சீர்படுத்தும் ஓர் அருமருந்துக்கான பேராற்றல் திருவிளவிலியத்தின் இறைவார்த்தைக்கு உண்டு என எடுத்தியம்புகிறது இந்நூல்
மலர்கள் குறித்த அறிவியல் பார்வையை மாணவர்களுக்கான கதை வடிவில் சொல்கிறது இந்நூல்.
திருவிவிலிய வரலாறு, திருத்தொகுப்பு, பொருள்விளக்கம், இறை ஏவுதல், உள்ளடக்கம்.... என்று நீளும் 26 தலைப்புகளில் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூல் அமைந்திருப்பதுடன், திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது !
ஊடக வெளிச்சம் பாயாத நூறு சாதனை மனிதர்கள்மீது கவனம் செலுத்தி, அவர்களைச் சமூக அக்கறையோடு ஆவணப்படுத்துகிறது இந்நூல் !
வரலாற்று மரியாவை மீண்டும் கட்டமைத்து, அவர் இயேசுவின் பணிவாழ்வில் பின்தொடர்ந்தார் அல்லது உடன்பயணித்தார் என்பதை உணர்வுபூர்வமாக நம் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.
உடன் உழைப்பாளர்களோடு எப்படித் தோழமை உணர்வோடு பயணிக்க வேண்டும் என்பதை புனித பவுல் தீத்துக்கும், பிலமோனுக்கும் எழுதிய மடல்கள் வழியாக நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது இந்நூல்.
சிலுவையும் கல்வாரியும் நிச்சயம் என்பது தெரிந்துகொண்டே ஓநாய்களை நோக்கி நடந்துசெல்லும் ஆட்டுக்குட்டியின் கம்பீரம்தான் இராணி மரியாவின் வரலாறு ! மானுடத்தின் அடையாளம் மன்னிப்பே என்று ஆணியடித்தாற்போல் எடுத்துரைக்கிறது இந்நூல்.
தியானம் வழியாக இறையனுபம் பெறுவதற்கான தடத்தை அமைத்து, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைத்தொகுத்துத் தருகிறது இந்நூல்
சமூக மாற்றச் சிந்தனையுடன் படைக்கப்பட்ட 26 கட்டுரைகளும் நம் இதயத்தைத் தொடுகின்றன. தன்பரிசோதனைக்கு நம்மை அழைத்து, சில மரபார்ந்த சிந்தனைகளைக் கட்டுடைக்கின்றன. புதியவற்றைக் கட்டமைக்க நம்மை உந்தித் தள்ளுகின்றன.
புனித மரிய கொரற்றியின் வரலாறை நெடுங்கதை வடிவில் உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கிறது இந்நூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium