தூரத்தில் உள்ளதை அருகில் கொண்டுவந்து நிறுத்துவதேஉபதேசம் என்று சொல்லப்படுவது. அதாவது சில ஆழமான மறையுண்மைகள் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில
இயேசுவை அறியாதவர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், இயேசுவைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தங்கள் புரிந்துணர்வைத் திருத்திக்கொள்ளவும், இயேசுவை ஓரளவு புரிந்தவர்கள் இன்னும் இயேசுவை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இந்நூல் சிறந்த ஒளிகாட்டி. இயேசுவை வழிபடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிவிடாமல், இயேசுவின் இலட்சியப் பாதையில் வழிநடக்க உதவும் வழிகாட்டி.
ஒரு மனிதரை மனிதராகப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது அவர் கொண்டிருக்கும் நற்பண்புகள், மதிப்பீடுகள், இலட்சியக் கனவுகள், உயர்ந்த எண்ணங்கள் போன்றவையாகும். ஒரு மாணவரின் அறிவாற்றலை விட அவரிடம் இருக்கவேண்டிய மனித நற்பண்புகளே அவரைச் சிறந்த மனிதராக உலகிற்குக் காட்டும் என்ற சித்தாந்தத்தை வலியுறுத்தியிருப்பது இந்நூலின் சிறப்பு.
The author touches important themes like acceptance, sin, forgiveness, freedom, authenticity in a detailed way with lots of examples. All these themes can be used on the personal or group level depending on the need. On the personal level this book may help for inner healing and personal conversion. On the group level it may be of use for collective sharing and reflection for better community living.
இந்த உலகில் பிறக்கின்ற குழந்தைக்கு இயற்கையாகவே ஒன்று மட்டும் கட்டாயம் தெரியும் அது தான் “அன்பு செய்வது.” இன்று நம்மில் ஒரு சிலர் அன்பு செய்யாது வாழ்கின்றோம் என்றால், அது நாம் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சில தாக்கங்களின் விழைவுதான். நாம் அன்பு செய்து வாழும் போது மகிழ்ச்சியாய் இருக்கின்றோம். தன்னையும் பிறரையும் அன்பு செய்யாத வேளையிலும், பிறரால் அன்பு பெறப்படாத நிலையிலும் நாம் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்கின்றோம். பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதமாக அன்றாட அனுபவங்கள் உங்கள் அனுபவங்களாக, புரிதலுக்காக தெளிவு பெற்றுக்கொள்வதற்காக உளவியல் நோக்கில் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
சில வரலாற்றுப் பதிவுகள், எண்ணங்கள், நிகழ்வுகள் என்பவைகளின் கலவையாக இந்த நூல் அமைந்துள்ளது. சின்னச் சின்ன சம்பவங்களைத் தொகுத்து, அச்சம்பவங்கள் வாழ்வியல் நற்பண்புகளை வெளிப்படுத்தும் விதத்தை உணர்த்தும் வகையில் அமைகிறது இந்நூல்.
வாழ்க்கையைச் சரியான பார்வையில் பார்க்க வேண்டும்; அணுக வேண்டும்; சுவைத்து வாழ வேண்டும் போன்ற சிந்தனைகளை உள்ளடக்கி நல்ல உதாரணங்களுடனும் நிகழ்வுகளுடனும் எழுதப்பட்ட நூல்.
திருவருகைக் காலம் தொடங்கி திருக்காட்சித் திருவிழா வரையிலான காலங்களின் நிகழ்வுகளை அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளுடன் அருமையாக இந்நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர்.
அன்னை தெரசா இந்திய தேசத்திற்கு இறைவன் வழங்கிய அற்புதமான பரிசு. ஹிந்தியாவின் தவப்புதல்வி என்று போற்றப்பட்டவர். “நீ என்னவாக இருக்கிறாயோ அது இறைவன் உனக்குக் கொடுத்த கொடை. நீ என்னவாக மாறுகிறாயோ அது இறைவனுக்கு நீ கொடுக்கும் கொடை” என்பது அவரது கருத்து. அன்னை தெரசா அவர்களைத் தான் சந்தித்தபோது ஏற்பட்ட இனிமையான அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்.
இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த திருத்தூதர்களோ, அவரது சீடர்களோ மறைச்சாட்சிகளாகவும் புனிதர்களாகவும் திகழ்வதில் வியப்பில்லை. ஏனென்றால் அவர்கள் கண்ணால் கண்டார்கள், தொட்டு உணர்ந்தார்கள். ஆனால், பல நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னும் அவருக்காக உயிரை ஈந்தும், எடுத்துக்காட்டாய் வாழ்ந்தும் புனிதத்தை நிலைநாட்டிய மாமனிதர்கள் வாழ்க்கைதான் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தகையவர்களின் வரலாறே இந்நூலில் உரைக்கபட்டுள்ளது.
நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு எதிர்ப்புகளை வென்று சாதித்த மனிதர்கள் மற்றும் அவர்களின் சாதனைகளை இந்நூல் பட்டியலிடுகிறது.
போட்டி - ஒருவரை எதிரியாகப் பார்க்கத் தூண்டுகிறது. இதனால் ஒருவரின் உடல், உள்ள, உறவு மதிப்பீடு போன்றவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. இப்போட்டியின் தீமையை நன்கு ஆய்வு செய்கிறது இந்நூல்.
ஊழலும், ஒழுக்கமின்மையும், சுயநல மனப்பான்மையும் நாளுக்கு நாள் மிகுந்து வரும் சூழலில், நமது இளைஞர்களுக்கும், நல்லதைத் தேடும் யாவருக்கும் ஒரு தூண்டுகோலாக அமைகின்றது இந்நூல்.
Subscribe to our website mailling list and get a Offer, Just for you!
Sed ut perspiciatis, unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium