loader
cat-banner

Published Year :2017

Showing Products 1-16 of 10 Result
Number of rows: 
product
product
குடும்பக் கலை

அன்றாட நடப்புகளை அலசிப் பார்த்து, குடும்பங்கள் கற்க வேண்டிய பாடத்தைப் பகுத்துச் சொல்லி, அக ஆய்வுக்கான கேள்விகளை எழுப்பி, அனுபவத்திலிருந்து குடும்பக்கலைக்கான வாழ்வியலை வளர்த்துக்கொள்ள அழைக்கிறது இந்த நூல்.

120
product
product
கேள்வித் தீ

சமூகத்தின் அக-புறவாழ்வியல், அரசியல் - பொருளியல் எதார்த்தங்கள், அன்றாட அவலங்கள், திணிக்கப்படும் கற்பிதங்கள், நியாயப்படுத்தப்படும் அடிமைத்தனங்கள், நிலவும் தவறான அறநெறி, நீடிக்கும் ஆதிக்கம், உதயமாக வேண்டிய சமத்துவ மானுடம் ஆகியவை குறித்த பல கேள்விகளால் வேள்வி செய்கிறது இக்கட்டுரைத் தொகுப்பு.

70
product
product
அர்த்தமுள்ள அனுபவங்கள்

அவ்வப்போது மின்னல் போல நிகழ்ந்து மறையும் பல அனுபவங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதில்லை. திறந்த மனதோடு அவற்றை அசைபோடும்போது, அவற்றின் ஆயுள் நீடிக்கிறது. சில அனுபவங்களில், நமக்குள்ளும் ஏதோ ஓர் உள்ளொளி பிறக்கிறது. அந்த உள்ளொளி நமது வாழ்வுக்குப் பாதையைச் செதுக்குகிறது. இவ்வாறான அனுபவங்களை `அர்த்தமுள்ள அனுபவங்கள்’ நூல் வாயிலாக நம்முடன் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.

30
product
product
விடியல் தேடும் வினாக்கள்

நம் ஆளுமையைச் செதுக்க வழியமைத்து, மாற்றத்திற்கான கேள்விகளை எழுப்பி, சமூக அக்கறையுடன் சிந்திக்கிறது இந்நூலில் உள்ள கட்டுரைத் தொகுப்பு.

70
product
product
வெற்றிப் பாதைகள்

கடிவாளமிட்ட குதிரையைப் போல நமக்கு இலக்குத் தெளிவு இருந்தால் நமக்கான வெற்றிப்பாதை நிச்சயம் தெளிவாகும். நமது பார்வையையும் நமது இலட்சியத்தையும் கூர்மைப்படுத்த சில அனுபவங்களால் சான்றளித்து நம்மை நாமே நெறிப்படுத்திக்கொள்ள `வெற்றிப் பாதைகள்’ என்ற நூல் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

30
product
product
விளிம்புகள் தேடும் விடியல்

விளிம்புநிலை மாந்தர்களோடு உணர்வால் ஒன்றித்து, அவர்கள் வாழ்வியலை அறிவால் பகுத்துணர்ந்து, இறையியல் சிந்தனையோடு விடியலுக்கான தேடலை முன்வைக்கிறது இந்தப் படைப்பு.

90
product
product
மனிதர்களும் மாதிரிகளும்

எத்தனையோ மனிதர்கள் நம்மைக் கடந்து சென்றாலும், அவர்களில் சிலர் நம்மை ஈர்க்கின்றனர். சிலரது ஆளுமைகளை நாம் ரசிக்கிறோம். சிலரிடம் பாடம் கற்கிறோம். ஏதோ ஒரு வகையில் அவர்கள் நமக்கு முன்மாதிரியாக அமைந்துவிடுகிறார்கள். இத்தகைய அனுபவங்களின் தொகுப்பே `மனிதர்களும் மாதிரிகளும்’ என்ற நூல்.

30
product
product
பரிவின் பரிமாணங்கள்

பரிவு அல்லது அன்பு எனப்படும் மாந்தநேயப் பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளை எளிய நடையில், செறிவான சிந்தனையில், திருவிவிலிய ஒளியில், இறையியல் பார்வையில், ஆழ்ந்த ஆன்மிக நெறியில், தேர்ந்த விளக்கத்தோடு தருகிறது இந்நூல்.

60
product
product
சாதிக்கத் தூண்டும் வாழ்வியல் சிந்தனைகள்

இந்நூலில் இடம் பெறும் சம்பவங்கள், மனிதர்களின் அணுகுமுறைகள், வழிகாட்டும் நெறிகள் பிறர் எப்படிச் செயல்பட்டுச் சாதித்தார்கள் என்று தெரிந்துகொள்ள நமக்கு உதவும்.

40
product
product
என்னமோ நடக்குது

ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனிமனிதரைக் காரணம் காட்டி, சந்தர்ப்ப சூழலைச் சாக்குச் சொல்லித் தப்பிக்கிற மனோபாவத்திலிருந்து நம்மைக் கடத்திச்சென்று, பரந்துபட்ட சமூக மாற்றச் சிந்தனையுடனும் சமூக அக்கறையுடனும் ஆளும் அரசுகளின் பொறுப்பைத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டுகிறது இந்தப் படைப்பு!

70
product
product
Recipes For A Fuller Life

This book encapsulates personality development, motivation, psychology, interpersonal relationship, self-awareness, spirituality, etc. With a right blend of definition, narration, anecdotes, popular quotes and questions for thought, the author offers us an invitation to make our life meaningful and joyful.

80
product
product
வெற்றி தரும் ஆளுமைப் பண்புகள்

வாழ்க்கைச் சம்பவங்கள், சில வரலாற்று, சமூக, அரசியல் நிகழ்வுகள், சில வாய்வழி மரபுகள், சில அறிவியல் உண்மைகள், சில கதைகள், சில தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, விவரித்து, அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆளுமைப் பண்புகளைப் பட்டியலிடுகிறது இந்நூல்.

60
product
product
சின்னச் சின்ன சிந்தனைகள் பாகம் - 5

நாம் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிற பல சிந்தனைகளைப் புரட்டிப்போடும் சிறப்புடனும், வாழ்வின் இலட்சியத்தைப் புரிந்துகொண்டு கூர்மைப்படுத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் இந்த ஐந்தாம் பாகம் அமைந்துள்ளது.

15
product
product
வெற்றிக்கான சிந்தனைகள்

வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தை அடையத் தன்முயற்சியும், தன்னம்பிக்கையும், அகத்தேடலும், திசைவழியாக்கச் சிந்தனைகளும் அவசியம் என்பதை இந்நூல் எளிமையாக எடுத்துரைக்கிறது.

20
product
product
தண்ணீர் யாத்திரை

நீரின் சமூக, பொருளியல், அரசியல், பண்பாட்டுப் பரிமாணங்களை எடுத்துச்சொல்லி, தனிமனித அளவிலும், சமூக அளவிலும், அரசு அளவிலும், உலக அளவிலும் மானுடம் மேற்கொள்ள வேண்டிய தண்ணீர் யாத்திரைக்குத் தடம் பதிக்கிறது இந்நூல்.

50
Showing Products 1-24 of 10 Result

my cart

my account

forget password?
new to store? Signup now

my wishlist

my setting

language
currency